சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் இன்று காலை 10 மணி வரையில் கன மழை பொழியும் என்று சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது .
இந்த நிலையில் சென்னையில் அண்ணாசாலை , தாம்பரம் , பட்டினம்பாக்கம் , ஆலந்தூர் , அயனாவரம் பகுதிகளிலும் , சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் கனமழை பொழிந்து வருகிறது . மேலும் வரும் 29 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்ற அறிக்கையை சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது .