வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தற்பொழுது மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த நான்கு மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் நிவாரண முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.