தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் அதிகப்படியான வெயிலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருவதாகவும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து கனமலையானது கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வருகின்ற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தென் தமிழகமான டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் என்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றும் வறண்ட வானிலையே நிலவு கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.