தமிழகத்தில் கோடை வெப்பமானது வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. மக்கள் கடும் வெயில் காரணமாக வெளியே வர முடியாத சூழலும் நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது இந்த மிதமான மழையானது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூணு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தென் மாவட்டங்கள் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.