தமிழகத்தை கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேன் இருக்கிறது. கடந்த ஒரு வாரம் காலமாக வெப்பநிலையானது தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. மேலும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுரை வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து வருகின்ற ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலையானது 109 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும் என்றும் வெப்ப அலையானது வீசப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மே 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் வட மாவட்டங்களில் வெப்பநிலையின் அளவானது தற்பொழுது நீடித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலையின் அளவைவிட 3 முதல் 5 டிகிரி அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் தென்தமிழகமான கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வெப்பநிலையின் அளவானது வருகின்ற நாட்களில் அதிகரித்த காணப்படும் என்றும் வெப்ப அலையானது வீசப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.