தமிழகத்தின் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில பகுதிகளை வெப்பநிலையின் அளவானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழையானது பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட தமிழகத்தில் வெப்பாலையும் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நாளை தமிழகத்தில் கோவை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.