தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயிலானது வாட்டி வதைத்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளை மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை, உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை செய்யப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் பொறுத்த வரை ஒரு சில பகுதிகளில் வானம் மேகம் ஓட்டத்துடன் காணப்படும் என்று அப்போது தூரல் மலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.