தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கனமழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிக கன மழையானது கடந்த 12 மணி நேரமாக பெய்து வருகிறது.
வங்கக்கடலில் புயல் சின்ன உருவான நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. சென்னையில் கடந்த 12 மணி நேரமாக அதி கனமழையானது இடைவிடாது பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தற்பொழுது இருக்கும் மழையின் அளவைவிட அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.