வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு வார காலமாகவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதி கன மழை இரண்டு நாட்களாக பெய்து வந்தது. இன்று சற்று ஓய்ந்த நிலையில் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நாளை அக்டோபர் 17 – ஆம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது