வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு அந்தமான் ஒட்டிய வங்க கடலில் தற்பொழுது நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும். அதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வருகின்ற அக்டோபர் 24 – ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா கடற்கரையோரம் கரையை கடக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு டானா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தும் தமிழகத்தில் இந்த புயலின் காரணமாக கனமழை வாய்ப்பு உள்ளதா என்று வருகின்ற நாட்களில் தெரியவரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.