வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் முன்னெச்சரிக்கையாக 9 துறைமுருகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழையானது பெய்து வந்தது. இதை தொடர்ந்து சற்று விலகிய நிலையில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வும் மண்டலமானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவிற்கு தென்கிழக்கு 730 கி. மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் வங்க தேசத்திற்கு 740 கி. மீ தொலைவிலும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாக வலுப்பெற உள்ளதாகவும் இந்த புயலின் பெயர் டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நிலை பெற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடப்பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானா புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.