தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை சேலம், மதுரை, திண்டுக்கல், திருப்பத்தூர், மற்றும் வேலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.