தென்மேற்கு வங்க கடலில் இந்த வார இறுதிக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற நாட்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று மற்றும் நாளை கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.