தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற நாட்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை செய்யக்கூடும் என்றும் தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்டம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னையை பொருத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.