கடந்த அக்டோபர் மாதம் 10 மாநிலங்களில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. மேலும் அதைத் தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவான நிலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறியது.
இந்த புயலானது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் அருகே கரையே கடந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாகவும். தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற வாரங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து மழை பொழிவை கொடுக்கும் என்றும் நவம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழையானது பெய்யக்கூடும் என்றும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இயல்பை விட 123% சதவீதம் அதிக மழைப்பொழிவை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.