வங்க கடலில் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வருகின்ற 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இன்னும் இரு தினங்களில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும். இதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.