தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பொருத்தவரை கடந்த சில நாட்களாகவே கனமழையானது இரவு நேரங்களில் பெய்து வருகிறது. இதை தொடர்ந்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகரித்து வருகிறது.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.