தென்மேற்கு வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் நாளை முதல் கன மழை பெய்யப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்க இருந்த நிலையில் காற்று சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த காற்றழுத்த தழ்வு பகுதியானது தமிழக மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும். இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.