வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று உருவானதை தொடர்ந்து. சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழையானது பெய்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையானது பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வருகின்ற நவம்பர் 17 – ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கன மழையானது பெய்ய கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிர படுத்த வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வடித்துள்ளது.