வங்கக்கடலில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகள் நிலவி வருகிறது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று இரவு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.