வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளின் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை தொடர்ந்து இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.