தென் தமிழக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டலும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.