குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும். இதை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக் கடலின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக தென் தமிழகத்தில் கனமழையானது வெளுத்து வாங்கியது. இதைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சியானது தமிழகம் மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என்றும் இதை தொடர்ந்து வருகின்ற நாட்களில் மிக கனமழைகான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனேக இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று இரவு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலும், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.