வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தை நோக்கி தொடர்ந்து நெருங்கி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கு சுமார் 880 கிலோ மீட்டர் தூரத்திலும். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு 1050 கிலோமீட்டர் தூரத்திலும் மேலும் புதுவையில் இருந்து தென்கிழக்கு 980 கிலோமீட்டர் தூரத்திலும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வருகின்ற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்று கணிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. தமிழக மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி தொடர்ந்து நகரக்கூடும் என்றும் இதன் காரணமாக 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் வருகின்ற 30 ஆம் தேதி வரை கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும். என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகின்ற நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.