வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தற்பொழுது கனமழையானது பெய்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வருகின்ற நாட்களில் படிப்படியாக மழை குறைய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தற்பொழுது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து வருகின்ற 24 மணி நேரத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.