வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது டெல்டா கடற்கரை நோக்கி நகர்ந்து வருவதாகவும். இதை தொடர்ந்து அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையிலிருந்து சுமார் 630 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து சுமார் 830 கி.மீ தொலைவிலும் அதேபோன்று புதுச்சேரியிலிருந்து சுமார் 750 கி.மீ தொலைவிலும் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ள நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்ட அனைத்து பகுதிகளும் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வருகின்ற 1 ஆம் தேதி வரை கனமழை தொடரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.