வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழக நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயலானது கரை கடக்கும் பொழுது 90 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்றும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.