தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை இந்த வருடம் சற்று அதிக அளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மழையின் அளவு சற்று இயல்பை விட இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.