தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதை தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வருகின்ற வாரங்களில் மழையின் அளவானது அதிகரித்து காணப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்தும் மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு மற்றும் மழைநீர் வடிகால் வசதி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து டி.என் அலார்ட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தீவிர தன்மையை உணர்ந்து தமிழ்நாடு அரசு இந்த சிறப்பு செயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும் மழையின் அளவு மற்றும் காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை தகவலை இந்த செயலின் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலியில் முழுவதும் தமிழில் விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும். மொபைல் ஆப் மூலமாக பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. வருகின்ற நான்கு நாட்களுக்கான வானிலை அறிவிக்கையை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு இந்த செயலி பயன்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Google Play Store – யில் TN – ALERTஎன்ற செயலியை பதிவிறக்கம் செய்து வானிலை முன்னெச்சரிக்கை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.