தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து தென்காசி, தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வருகின்ற நாட்களில் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்க கூடும் என்றும். வெப்பநிலையின் அளவானது 32 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.