வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும். இதைத் தொடர்ந்து வருகின்ற மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை கடலூர், அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும். இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவ மாழையானது இந்த வருடம் அதிக அளவு பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.