தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பரவலாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தகவலின்படி கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் மிக கனமழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் நாளை மற்றும் நாளை 21.07.2024 முதல் 26.07.2024 வரை பரவலாக மழை இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல் மலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையானது 34 முதல் 35 டிகிரி வரை இருக்கக்கூடும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி முதல் 28 டிகிரி வரை இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.