தமிழக பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளிள் சூறாவளி காற்று வீசி வருவதாகவும். மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியேற்றுள்ளது.