தனது சொந்த ஊரை விட்டு வேலை செய்வதற்காக வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் தங்கி வேலை செய்வதற்கு ஒரு பாதுகாப்பான இடம் அமைவது மிகவும் கடினம். அப்படி பாதுகாப்பாக இருந்தால் வாடகை ஆனது அதிகமாக காணப்படுகிறது. இதை சமாளிப்பதற்கு மிகுந்த கஷ்டமான சூழ்நிலையாக காணப்படுகிறது. இவர்கள் வேலைக்கு செய்து சம்பாதிக்கும் பணத்தில் பாதி வாடகைக்கு போய்விடுகிறது.
இதற்கெல்லாம் தீர்வாக அரசு சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 16.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், அடையார், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. 684 படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதி மகளிர்க்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகளிர் விடுதிகளை நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
மகளிர் விடுதிகளின் சிறப்புகள்
உள் நுழைவாயில் பயோமெட்ரிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் பாதுகாப்பான வசதி
சிறந்த குடிநீர் வசதி, இலவச வைபை வசதி
24 மணி நேரமும் சிசிடி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
இலவச Wifi வசதி
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல வசதிகளை கொண்ட தமிழக அரசின் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதியில் சேர்வதற்கு www.tnwwhcl.in என்றஇணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.