உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம் 21 வயது இளைஞரான இவர் தன் காதலித்து வந்த பெண்ணை உடனடியாக நேரில் பார்க்க பார்க்க வேண்டும் எனக் கூறி உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏரி உச்சியில் நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரிடம் ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசார் பெற்றோர் நண்பர்கள் என யார் அழைத்தாலும் செல்போன் டவரில் இருந்து இறங்க மறுத்த அந்த இளைஞர் தனது காதலி வரும் வரை செல்போன் டவரில் இருந்து இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.
இச்சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தீயணைப்புத்துறை வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இருப்பினும் நள்ளிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் மற்றொருபுறம் போலீசார் சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை அவரது கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்டு அந்த இளைஞர் கலீம் முன்பு நிறுத்தப்பட்டனர்.
அதன் பிறகு கண்ணீர் மலக அந்த இளைஞர் டவரில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்த போது அவரை பத்திரமாக மீட்ட போலீசார் சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவில் காதலர் தினத்தில் காதலியை பார்க்க வேண்டும் எனக் கூறி இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.