மதுரையில் போதைப் பொருள் ,சிறப்பு தடுப்பு பிரிவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகின்ற கஞ்சா பதுக்கிய வழக்கு .
தேனி மாவட்ட போலீசார்கள் பிரபல youtuber சவுக்கு சங்கரை சஞ்சா வழக்கில் கைது செய்துள்ளார். பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்று சமீபத்தில் விடுதலையான சவுக்கு சங்கர் இந்த வழக்குகளுக்கு தொடர்ந்து விசாரணையின் போது ஆஜராகாததால் நீதிமன்றத்தில் அவருக்கு பிடிவாரண்ட் போட்டது.
youtuber சவுக்கு சங்கர் பெண் போலீஸ்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறுகளை பரப்பி வந்ததால் சில மாதங்களுக்கு முன்பு அவர் மீது புகார் இருந்தது. அதன் அடிப்படையில் கோவை போலீஸார்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இப்போது தேனியில் தங்கி இருந்த அவர் கஞ்சா பதுக்கியதாக பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு பதிவாகி இருக்கிறது. இந்த வழக்கிற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்த விசாரணையில் ஆஜராகி வந்த சவுக்கு சங்கர் சில விசாரணைக்கு ஆஜராகாததால். நீதிபதி செங்கமல செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு இந்த வழக்கு கொண்டுவரப்பட்டது இந்நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாததனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் உத்தரவிடப்பட்டது.