பிரபல யூடியூபர் இர்பான் உணவகங்களில் உள்ள உணவுகளை பற்றி ரிவிவ் செய்து மிகவும் பிரபலமானவர். இவர் இர்பான் வியூஸ் என்னும் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். திரை பிரபலங்களுடன் பல நேர்காணல் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பல வீடியோக்களையும் அவரது youtube பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார்.
சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை பாலினத்தை குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வெளிநாட்டிற்குச் சென்று அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை பற்றி தெரிந்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இர்பான் மீது சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை மேற்கொண்டு வரும் சுகாதாரத்துறை இன்னும் சில நாட்களுக்குள் முழு தகவலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.