Youtuber இர்பான் சமீபத்தில் அவரது Youtube பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது குழந்தை ஆணா..? பெண்ணா..? என்று துபாயில் பரிசோதனை செய்து பெண் என உறுதி செய்தார். பிறகு தமிழ்நாட்டின் அதற்கான விழா ஒன்றை வைத்து பிறக்கப் போகும் குழந்தை பெண் என கொண்டாடி மகிழ்ந்தார். இதை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் செய்தது தவறு என மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவையும் அவரது Youtube பக்கத்திலிருந்து நீக்கினார்.
இதை தொடர்ந்து தற்பொழுது அவரது மனைவியின் பிரசவ அறையின் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை அவரே அறுக்கும் வீடியோவையும் அவரது youtube பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி இது தவறான செயல் என்றும் மருத்துவர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்த செயலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து இர்பான் மனைவிக்கு சிகிச்சை அளித்த ரெயின்போ மருத்துவமனையின் மருத்துவர்- களுக்கு நோட்டீஸ் பறந்தது.
தனியார் மருத்துவமனையான ரெயின்போவில் பணியாற்றி வரும் மருத்துவர் நிவேதா மீது மருத்துவ சட்ட விதிகளை மீறி உள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவலை வெளியிட்டுள்ளார்