இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி என்பது பிரபலமான முறையில் செயல்பட்டு வருகிறது. சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து மிக விரைவாகவே டெலிவரையும் கிடைத்து விடுகிறது. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதுபோன்ற ஆன்லைன் உணவு செயல்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆர்டர் செய்த உணவு வகைகள் மிக விரைவாகவே டெலிவரையும் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக இது போன்ற ஆன்லைன் உணவு செயலிகளின் மவுஸ் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் சந்தையில் இந்த நிறுவனங்களின் மதிப்பு பல பில்லியன் கணக்காக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக இது போன்ற செயல்களிலும் பணியாற்றி வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் காலை முதல் இரவு வரை இந்த செயலியின் விறுவிறுப்பை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம். உணவுகளை டெலிவரி செய்பவர்கள் ஆயிரக்கணக்கான பெயர் பைக்குகளில் பறந்து வருகின்றனர். இது போன்ற உணவுகளை டெலிவரி செய்யும் டெலிவரி மேனுக்கு கொடுக்கப்படும் டிப்ஸ் கொடுப்பது சில பேர் வழக்கமாக வைத்துள்ளனர்.
அதேபோன்று புத்தாண்டின் முந்தைய நாள் ஆனவர் டிசம்பர் 31 ஆம் தேதி மட்டும் சோமோட்டோ நிறுவனங்களில் வேலை செய்யும் டெலிவரி செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் டிப்ஸ் ஆக ரூ.97 லட்சம் கொடுத்திருப்பதாக zomato நிறுவனம் அவர்களின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவித்துள்ளனர். இந்த பதிவானது சோசியல் மீடியா தளங்களை மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.