பான் கார்டு வைத்து இருப்பவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மத்திய அரசு பல நாட்களாக அறிவுறுத்தி வருகிறது.இதற்காக கால நீட்டிப்பும் கொடுத்து வந்தது.கடைசி நாளாக ஜூன் 30 ஆன இன்றுடன் முடிவடைகிறது.சில புதிய பான் கார்டுகள் பயன்படுத்தி சிலர் வரி கட்டாமல் மோசடி செய்து வருவதாக வருமான துறைக்கு தெரிய வந்துள்ளது.
இதனை சரிப்படுத்த ஜூலை 17 தேதி வரை பான் கார்டு வாங்கி இருப்பவர்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அறிவிப்பு வந்தது.கடந்த வருடமே இந்த அறிவிப்பு வந்தது.மேலும் சில மாதங்கள் நீடிப்பு வழங்கியும் உள்ளது.
அதன் அடிப்படையில் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் நாளை முதல் காலாவதி ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.இதனால் ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்படும்.அதற்கு அவரே முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.