மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் AI CHAT GPT நுண்ணறிவு தொழில்நுட்பம். இதன் பயன் தேவை உள்ளது என்றாலும் இது மக்களின் வேலை வாய்ப்பை பறித்து விடும் என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில்.அதற்கேற்ப ஹார்வார்டு பல்கலைக்கழகம் தங்களுடைய கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு AI ChatGPT எனப்படும் சாட்பாட் ஒன்றை ஆசிரியராக நியமிக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்தின் அதிநவீன Chat GPT 3.5 அல்லது ChatGPT 4 மாடல்களை தழுவி ஏஐ சாட்பாட் உருவாக்கப்படும் என இது தொடர்பான திட்டமிடல் பணியில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1:1 என்ற முறையில் நியமிக்க திட்டம்
பல்கலைக்கழகம் தங்களுடைய கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு 1;1 ஒன்றுக்கு 1:1 என்ற கணக்கில் மாணவர்:ஏஐ மென்பொருள் ஆசிரியர் என்ற விகிதம் வழங்கப்பட இருக்கிறது.
இது மாணவர்களுடன் 24/7 என்ற கணக்கில் செயல்படுவதுடன் இவை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் உதவும் என நம்புவதாக கணினி துறையின் பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.வரும் செப்டம்பர் மாதம் இந்த AI Chat GPT எனப்படும் சாட்பாட் ஆசிரியர் பணி அமர்த்தப்படும் என தகவல் வெளி ஆகி உள்ளது .