தற்போது அனைவரிடத்திலும் பெரிதாக பேசப்படும் ஒன்று AI செயற்கை தொழில்நுட்பம் இது சமிப களத்தில் அனைவரிடத்திலும் மிக குறுகிய காலக்கட்டத்தில் பெரிதாக பேசப்பட்டு வரும் ஒன்றாகும். இது பல துறைகளில் அதீத செல்வாக்குகளை பெற்றுள்ளது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாக வந்த blue whale game பற்றி அனைவரும் அறிவோம்.அந்த விளையாட்டு பல உயர்களை பரித்தது.இது நல்லவர்கள் பயன்படுத்தினால் நல்லதாகவே இருக்கும் தவறும் பச்சத்தில் இது தவறானவர்கள் கைக்குச் செல்லும் பொழுது ஆபத்தில் முடியும்.
மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் முடிப்பதற்கு இது மிகவும் உதவிக்கரமாக உள்ளது.கவிதை கட்டுரைகள் ,ஓவியம் புகைப்படங்கள் உருவாக்கிக்கொடுப்பது என செயற்கை நுண்ணறிவு AI தற்போது இது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றிவிட்டது.
இந்த AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது மருத்துவதுறைகளிலும் வந்துவிட்டது.சாதரணமாகவே தற்போது அனைவரிடத்திலும் பரவிய ஒன்று கூகிள் சர்ச் நமக்கு உடம்பு சரி இல்லையென்றாலும் நாம் உடனடியாக கூகிள் சர்ச் செய்து நாமே மருத்துவம் பார்த்துக்கொல்ல்கிறோம் அது சரி ஆகா வில்லை என்றல் மட்டுமே நாம் அடுத்ததாக மருத்துவரை அணுகுவோம் இது தற்போது இருந்து வரும் நிலையாகும்.
அந்த வகையில் மனநல பிரச்சனைகளுக்கு கூகுளைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இருப்பவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவிடம் தெரிவித்ததும், அது பிரச்சினையை பொறுமையாகக் கேட்டுக் கொள்கிறது.நேரடி உரையாடல்கள் மூலமாக ஒவ்வொரு கேள்வியாக கேட்டு, அந்த நிலைமையைப் புரிந்துகொண்டதும், குறித்த சிக்கலை எப்படிக் கையாளலாம் என்று சில வழிமுறைகளைக் கொடுக்கிறது.ஏற்கெனவே பல செயலிகள், மக்கள் தினம் தினம் சந்திக்கும் மன அழுத்தத்தைப் போக்க சில வழிகளையும், ஒட்டுமொத்த மனநல ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.