Death clock: உங்களுடைய இறப்பை தெரிந்துகொள்ள!
மரணத்தை கணிக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம்!
மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்பது இயற்கை.
மரணத்தைப் பற்றி மட்டும் மனிதன் அறிய முடியாத ஒன்றாக இருந்த சூழ்நிலையில் தற்போது அதையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் பல துறைகளில் வளர்ந்துகொண்டே வருவதை காண முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருகிற நிலையில் மனிதர்கள் செய்யக்கூடிய பலவிதமான வேலைகளை ஏஐ செய்வதால் மனிதர்களை அச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இது மனிதர்களால் கணிக்க முடியாத மரணத்தையும் கணிக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளதாம்.
மரண தேதியை அறியும் கருவி
டெத் கிளாக் எனப்படும் ஏஐ மனிதர்களின் இறப்பை கணிக்க கூடியதாக இருக்கிறது. ஏழாம் மாதம் வெளியான டெத் கிளாக் என்ற செயலி மூலம் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் இறப்பு விவரத்தை அறிந்துள்ளனர்.
மேலும் மரணத்தை தள்ளி போடுவதற்கான கருத்துக்களையும் வழங்கக்கூடிய இந்தச் செயலியை பயன்படுத்தி மக்கள் தெளிவடைகின்றன.
மரண தேதியை அறிந்து கொள்ள அவர்களின் பிறந்த தேதி, பாலினம், எடை ,உயரம் ,உணவு பழக்கவழக்கம், வாழும் இடம், தூங்கக் கூடிய நேரம், உடற்பயிற்சி, செய்யக்கூடிய தீய பழக்க வழக்கம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். அந்த ஏ ஐ செயலி இடம். ஏஐ செயலி ஆனது நாம் வழங்கக்கூடிய அறிக்கையில் இருந்து நம்முடைய மரண தேதியை தீர்மானித்து சொல்லும்.
அதோடு மட்டுமல்லாமல் மரணத்தை தள்ளி போடுவதற்கான அறிவுரைகளையும் கொடுக்கும்.
இந்த ஏஐ செயலி நம்முடைய உடல் எடை மற்றும் உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றை சரியான முறையில் செய்ய அறிவுரை வழங்கும்.
இந்த ஏஐ செயலி நம்முடைய உடல் எடை அதிகமாக உள்ளதா என்பதையும்மற்றும் உணவுப் பழக்க வழக்கம் சரியான முறையில் உள்ளதா என்பதையும் தெரியப்படுத்துவதுடன். தவறாக இருந்தால் அதை சரி செய்யவும் உதவி செய்கிறது.
இது மட்டுமல்லாமல் தீய பழக்க வழக்கங்கள் ஏதேனும் இருப்பின் எடுத்துக்காட்டாக சிகரெட் பிடித்தல் புகையிலை கொள்ளுதல் போன்றவை இருந்தால் அதனால் உடலுக்கு உண்டாகும்கேடுகளை விளக்குவதுடன் இதனை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் குறையும் என்பதையும் தெரிவிக்கிறது.