புதிய அம்சங்கள் கொண்ட வரி செலுத்துவோருக்கான வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்.
இதற்கு முன்னதாக வருமான வரி செலுத்துவதற்கான தொடங்கப்பட்ட இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் வரி செலுத்துவோர் ஏராளமான சிரமங்கள் அனுபவித்து வந்தனர். எனவே குறைபாடுகளை சரி செய்யும் விதத்தில் இணையதளத்தை புதுப்பிக்கும் பணிகள் குறிப்பாக பல்வேறு வசதிகளையும் சேர்த்து புதிதாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது .
இந்த இணையதளத்தை மத்திய நேரடி வரி வாரிய தலைவர் நித்தின் குப்தா நேற்று உதய்பூரில் நடந்த ஒன்று தொடங்கி வைத்தார் . இதைப் பற்றின தொடர்புகளை நேரடி வரி வாரியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையின் படி “வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் வேகத்தைத் தக்கவைக்கவும், வருமான வரித்துறை தனது தேசிய இணையதளமான ‘www.incometaxindia.gov.in’ பயனாளருக்கு நெருக்கம், மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.