நாம் தினமும் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம்,பேஸ்புக்கில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.புகழ்பெற்ற நடிகர்,நடிகைகள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படம் அருகில் bluetick தெரியும் படி நிறுவனங்கள் செய்து உள்ளன.இதற்கு காரணம் அந்த நபர்தான் அதிகாரபூர்வமாக இந்த பக்கத்தை பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
இந்த bluetick காட்ட வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று twitter நிறுவனம் கூறியுள்ளது.இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்,ஃபேஸ்புக்கிலும் கட்டணம் வசூலிக்க இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த மாதம் நடைமுறைக்கு வர இருக்கிறது.பிற நாடுகளில் அடுத்தடுத்த மாதங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.