உடலை பாதுகாக்க சரியான உணவு முறை,உடற்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி என பல உள்ளன.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்ச் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று தெரிவிக்கின்றனர்.இந்த ஸ்மார்ட் வாட்ச்ல் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
தற்போது தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றுதான் இந்த ஸ்மார்ட் வாட்ச். சாதாரணமாக மெசேஜ்,பொழுதுபோக்கு வீடியோஸ் மற்றும் தகவல் தொடர்பு என அனைத்தும் நாம் தொலைபேசி பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். தற்போது இந்த ஸ்மார்ட் வாட்சிலே அனைத்தும் செய்யும்படி வந்திருப்பது பற்றி சிலர் அறிந்திருப்போம்.
இதில் மேலும் ஒரு அம்சமாக உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்று கூறுகின்றனர்.உடல்நிலை சரியில்லாதவர்கள் தனியாக வெளியே செல்லும்போது கண்டிப்பாக இந்த வாட்ச் உதவும். உதாரணமாக இதயத்துடிப்பு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ உதவ அவசர எண்ணுக்கு தெரியப்படுத்தும்.
நாம் வீட்டில் இருக்கும் போது கூட இதய துடிப்பை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளலாம். உதாரணமாக இதயத்துடிப்பானது 60 முதல் 100 வரை இருக்கும். இதற்கு மேல் அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நமக்கு தெரியப்படுத்தும்.
ஸ்மார்ட் வாட்ச் இரண்டு வகை உள்ளது. நமது தொலைபேசியுடன் இணைத்துக் கொள்ளும் ஸ்மார்ட் வாட்ச். மற்றொன்று தனித்து இயங்கும் ஸ்மார்ட் வாட்ச் ஆகவும் செயல்படுகிறது.
நினைவூட்டுவதற்கு முக்கியமாக ஸ்மார்ட் வாட்ச் உதவுகிறது.பொதுவாக தொலைபேசியில் நாம் அலாரம் வைத்து நியாபகப்படுத்திக் கொள்வோம்.ஆனால் ஸ்மார்ட் வாட்சில் அதுவே தானாக நியாபகப்படுத்தும்.உதாரணமாக வெகு நேரமாக ஒரே இடத்தில் இல்லாமல் எழுந்து நடப்பது, வெகு நேரம் தண்ணீர் அருந்தாமல்இருப்பது,சரியான நேரத்தில் உணவருந்துவது போன்றவை எல்லாம் ஞாபகப்படுத்தும்.
தூங்கும் நேரத்தைக் கூட கணக்கிடும்.நாம் சரியான நேரத்தில் தூங்குகிறோமா?தூங்கும் பொழுது இதயதுடிப்பு ஆக்சிஜன் சரியான முறையில் உள்ளதா என்பதையும் துல்லியமாக கணக்கிடுகிறது
மேலும் அதிகமான பதற்றம்,மனஅழுத்தம் இருந்தால் தெரிவிக்கும். சிறிது நேரம் மூச்சு இழுத்து ரிலாக்ஸ் ஆக அறிவுரை கூறுமாம்.