Home » Blog » இன்ஸ்டாவில் டீன் ஏஜ்களுக்கு செக் – மெட்டாவின் புது ரூல்ஸ் 

இன்ஸ்டாவில் டீன் ஏஜ்களுக்கு செக் – மெட்டாவின் புது ரூல்ஸ் 

by Pramila
0 comment

இப்பொழுது இருக்கும் டீன் ஏஜ் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியாக்களில் மூழ்கியுள்ளனர்.   டீன் ஏஜ்களை கட்டுப்படுத்தும் விதமாக மெட்டா நிறுவனம் சில புது ரூல்ஸ்களை வெளியிட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து நைட் டைம் நட்ஜ்  என்ற பிக்சரை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலான டீனேஜ்கள் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.  அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத பொழுது போக்காக சோசியல் மீடியா மாறிவிட்டது. 

என்னதான் பொழுதுபோக்காக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.  புது புது அம்சங்களை வெளிப்படுத்தும் மெட்டா நிறுவனம் தற்பொழுது  டீனேஜ் களுக்காக புது ரூல்களை  அறிமுகம் செய்துள்ளது. 

சரியான நேரத்தில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆனால் இப்பொழுது இருக்கும் டீன் ஏஜ் பசங்க முழுவதும்  facebook, இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவு செய்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்கப்போகிறார்களா அல்லது இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என்று நேரத்தை செலவிடுகிறார்களா என்று பார்க்க வேண்டும். இந்த வேலையை தான் இந்த நைட் டைம் நட்ஸ் பிக்சர் செய்யப் போகிறது. 

நள்ளிரவு நேரங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பொழுது 10 நிமிடத்திற்கு ஒருமுறை  லாக் ஆஃப்  செய்யுமாறு ரிமைண்டர் செய்து கொண்டே இருக்கும். இந்த ரிமைண்டர் ஆனது பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் லாக் ஆஃப் செய்யும் வரை வந்து கொண்டே இருக்கும்.  இதை தொடர்ந்து மெசேஜருக்கு பேரண்ட் சூப்பர் விஷன் என்ற  டூல்  கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மெசேஜருக்கு யார் மெசேஜ் செய்வது யாருடன் அதிக அளவு மெசேஜ் பகிரப்பட்டுள்ளது என்று கண்காணித்துக் கொள்ளலாம். அதனுடன் யாரிடம் இருந்து மெசேஜ் வரக்கூடாது என்ற  கண்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டுப்பாடானது அனைத்து 18 வயது உட்பட்ட டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.