இணையதள வசதி அதிகரித்து வரும் இந்த சூழலில் மோசடிகளும் சேர்ந்தே அதிகரித்து வருகிறது. இணையதளத்தின் மூலம் பல மோசடி கும்பல்கள் பல வகைகளில் மோசடி செய்து வருகின்றனர். இந்த வலையில் அப்பாவி மக்களும் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
தற்பொழுது McAfee நிறுவனம் Global Scam Message Study என்னும் ஆய்வை நடத்தியுள்ளது அதில் இந்தியா மற்றும் 7 நாடுகளைச் சேர்ந்த 7000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் தற்பொழுது பிரபலமாகி வரும் AI செயற்கை நுண்ணறிவு காரணமாகவே பல மோசடிகள் நடந்து வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் தினம் தோறும் குறைந்தபட்சம் 12 மோசடி புகார்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியர்களில் 82% பேர் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி ஏமாந்து வருவதாகவும் ஆய்வின் தரப்பில் கூறப்படுகிறது. 64 % விழுக்காட்டினர் சலுகை அறிவிப்பை நம்பி சில குறுஞ்செய்திகள் மூலம் பணத்தை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சில நிறுவனங்களின் பெயரின் மூலம் பரிசு பொருள் வென்றுள்ளதாக சில குறுஞ்செய்திகள் வருவதாகவும் அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்தவுடன் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மிக எளிதாக மோசடி கும்பல் எடுக்கப்படுவதாகவும் ஆய்வின் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. எனவே மக்கள் வங்கி மற்றும் இதர நிறுவனங்களின் பெயரில் இருந்து வரும் குறுஞ்செய்தியை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.