சர்வதேச கார் உற்பத்தியில் இந்திய 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது அம்சங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அதிக கார் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது UK- வில் செயல் பட்டுவரும் மணிஷேக் என்ற அமைப்பு உலகம் முழுவதும் நடத்திய ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளது.அதில் இந்திய 5ஆம் இடமும் சீனா 1 இடம் பிடித்துள்ளது. ஜப்பானை பின் தள்ளியது குறிபிடதக்கது.
இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்த சீனா 25.7 மில்லியன் கார்களை உற்பத்தி செய்துள்ளது சீனா .நிமிடத்துக்கு 48.9 கார்களை உற்பத்தி செய்கிறது. கார் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனங்களாக உள்ள SAIC மற்றும் Dongfeng போன்ற நிறுவனங்கள் சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கார் உற்பத்தியில் சீனா கோலோச்சி வருவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்றும் மணிஷேக் நிறுவனம் கூறியுள்ளது
பின்னுக்கு நகர்ந்த ஜப்பான்
கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதல் இடம் வகித ஜப்பான் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் பின்னுக்கு தள்ளியது சீனா .சீனா முதல் இடம் பிடித்து உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 3.74 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது ஜப்பான். 2021 ஆம் ஆண்டில் 3 .82 மில்லியன் கார்களை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது ஜப்பான் . 2023 நடப்பு ஆண்டில் முதல் காலேண்டர் 9.54 லட்சம் கார்களை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது.
சீனா முதலிடம்
2023 ஆண்டில் முதல் 3 மாதங்களிலேயே 1 மில்லியன்கும் மேலாக ஏறகுமதி மட்டுரும் உற்பத்தி செய்துள்ளது சீனா இவை அபரிமிதமாக தொழிலாளர் வளம் ,உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கிறது.
உக்ரைன் போரும் ஒரு வித காரணமாகும் சீனா முதல் இடவருவதற்கு,உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்சிய மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு வகையில் பொருளாதார தடைகளை விதித்தது .அதனால் இந்த தடையை சீனா ஏற்ற்றுகொள்ளவில்லை. தொடர்ந்து அந்தநாட்டிற்கு அதிகப்படியான கால்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவிற்கு கார் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வந்து சேருவதில் பெரிய அளவில் தடை ஏற்பட்டது இதனால் டொயோட்டோ, வோக்ஸ்வேகன் போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்ட நிலையில், அந்த தேவையை சீனா பூர்த்தி செய்து வருகிறது.இதுவே மிக பெரிய உதவியாக இருக்கிறது சீனாவிற்கு .