கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் ஜே.என்.1 கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் 4,187 பேர் கொரோனா தோற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது